சிபிஆர் சிகிச்சை தாமதத்தால் பாடகர் கே கே மரணம் : மருத்துவர்கள் கருத்து

கொல்கத்தா

பாடகர் கே கே வுக்கு சிபிஆர் சிகிச்சை தாமதமாக அளித்ததால் அவர் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய பிரபல பின்னணி பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்றார்.  அவருக்கு அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தான் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

பாடகர் கேகேவின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் “பாடகர் கே கேவின் மரணத்திற்கு மாராடைப்புத்தான் காரணமாகியுள்ளது. அவருக்கு இதயக் குழாய்களில் அடைப்புகள் இருந்துள்ளதால் குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.  அவருக்கு சிபிஆர் சிகிச்சை தாமதமாக  அளிக்கப்பட்டுள்ளது.

மாறாகச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். கேகேவிற்கு வலிக்கான அறிகுறிகள் வந்திருக்கும். ஆயினும் அவர் அதனை வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் என்று நினைத்து இருக்கலாம்.    கேகேவின் பிரேதப் பரிசோதனையில், அவர்  அதிக அளவு ஆன்டாசிட்ஸ் (antacids- வாயு தொல்லைக்காகச் சாப்பிடும் மாத்திரை) உட்கொண்டது தெரியவந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.