சென்னை: கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்று வருகிறது. நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரிடம், முதல்வர் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளனர். நளினி, முருகன் உள்பட 6 பேர் விடுதலை குறித்தும் ஆளுநரிடம் முதல்வர் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.