காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து தனிமைப்படுத்திகொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சோனியா காந்தி விரைந்து குணமடைய பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ” கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து குணமடைய வேண்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ” கொரோனா தொற்று உறுதி செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்துகிறேன். தொற்றுநோய் இன்னும் நீங்காததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. பாடகர் கே.கே. மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்