ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு தனியார் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷோபியான் சேடோவில் நடந்த குண்டுவெடிப்பில் 3 வீரர்கள் காயமடைந்தனர். வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு தனியார் வாகனத்தில் பேட்டரி வெடித்ததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் விசாரிக்க உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.