தங்கம் விலை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது, இன்று காலை வர்த்தகத்தில் மந்தமான வர்த்தகம் காரணமாகத் தங்கம் விலை கணிசமாகச் சரிந்த நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் தங்கம் விலை அதிகரிக்கத் துவங்கியது.
இன்று தங்கம் விலை உயர என்ன காரணம்..? சென்னை, மும்பை, சேலம், டெல்லி, மும்பை உட்படத் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தங்கம் விலை என்ன..?
பணவீக்கம் மற்றும் கச்சா எண்ணெய்
உலகளவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை முதலீட்டு சந்தையை பெரிய அளவில் பாதித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, கொரியா என நாடுகள் வட்டியை உயர்த்த முடிவு செய்துள்ளதால் பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறது.
ஸ்பாட் தங்கம் விலை
இன்று காலை வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 1,847.49 டாலர் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது, இதேவேளையில் இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்) தங்கத்தின் விலை 0.2 சதவீதம் அதிகரித்து 10 கிராமுக்கு ரூ.50,892 ஆகவும், வெள்ளியின் விலை 0.26 சதவீதம் குறைந்து கிலோ ரூ.61,422 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை உயர்வு
ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் மொத்தமும் மாறியது, சரிவில் இருந்த பங்குச்சந்தை மீண்டு, தங்கம் மீதான முதலீடும் அதிகரித்தது. இதன் வாயிலாக சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 1,853 டாலராகவும், இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை 0.15 சதவீதம் அதிகரித்து 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.50,940.00 ஆகவும், வெள்ளியின் விலை 0.38 சதவீதம் அதிகரித்து கிலோ 61,815 ரூபாயாக ஆகவும் உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 77.56 ஆக உள்ளது, ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட தடுமாற்றமும் தங்கம் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ரீடைல் சந்தை
இதன் மூலம் இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலையில் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது. இதன் மூலம் தங்கம் வாங்க திட்டமிட்டுவோர் தங்கம் விலையை தெரிந்துகொண்டு வாங்குவது சிறந்தது.
10 கிராம் 22 கேரட் தங்கம் விலை
சென்னை – 47,750 ரூபாய்
மும்பை – 47,600 ரூபாய்
டெல்லி – 47,600 ரூபாய்
கொல்கத்தா – 47,600 ரூபாய்
பெங்களூர் – 47,600 ரூபாய்
ஹைதராபாத் – 47,600 ரூபாய்
கேரளா – 47,600 ரூபாய்
புனே – 47,700 ரூபாய்
பரோடா – 47,700 ரூபாய்
அகமதாபாத் – 47,700 ரூபாய்
ஜெய்ப்பூர் – 47,800 ரூபாய்
லக்னோ – 47,800 ரூபாய்
கோயம்புத்தூர் – 47,750 ரூபாய்
மதுரை – 47,750 ரூபாய்
விஜயவாடா – 47,600 ரூபாய்
பாட்னா – 47,700 ரூபாய்
நாக்பூர் – 47,700 ரூபாய்
சண்டிகர் – 47,800 ரூபாய்
சூரத் – 47,700 ரூபாய்
புவனேஸ்வர் – 47,600 ரூபாய்
மங்களுரூ – 47,600 ரூபாய்
விசாகபட்டினம் – 47,600 ரூபாய்
நாசிக் – 47,700 ரூபாய்
மைசூர் – 47,600 ரூபாய்
10 கிராம் 24 கேரட் தங்கம் விலை
சென்னை – 52,100 ரூபாய்
மும்பை – 51,930 ரூபாய்
டெல்லி – 51,930 ரூபாய்
கொல்கத்தா – 51,930 ரூபாய்
பெங்களூர் – 51,930 ரூபாய்
ஹைதராபாத் – 51,930 ரூபாய்
கேரளா – 51,930 ரூபாய்
புனே – 52,030 ரூபாய்
பரோடா – 52,030 ரூபாய்
அகமதாபாத் – 52,030 ரூபாய்
ஜெய்ப்பூர் – 52,080 ரூபாய்
லக்னோ – 52,100 ரூபாய்
கோயம்புத்தூர் – 52,100 ரூபாய்
மதுரை – 51,700 ரூபாய்
விஜயவாடா – 51,930 ரூபாய்
பாட்னா – 52,030 ரூபாய்
நாக்பூர் – 52,030 ரூபாய்
சண்டிகர் – 52,080 ரூபாய்
சூரத் – 52,030 ரூபாய்
புவனேஸ்வர் – 51,930 ரூபாய்
மங்களுரூ – 51,930 ரூபாய்
விசாகபட்டினம் – 51,930 ரூபாய்
நாசிக் – 52,030 ரூபாய்
மைசூர் – 51,930 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை – 67000.00 ரூபாய்
மும்பை – 61400.00 ரூபாய்
டெல்லி – 61400.00 ரூபாய்
கொல்கத்தா – 61400.00 ரூபாய்
பெங்களூர் – 67000.00 ரூபாய்
ஹைதராபாத் – 67000.00 ரூபாய்
கேரளா – 67000.00 ரூபாய்
புனே – 61400.00 ரூபாய்
பரோடா – 61400.00 ரூபாய்
அகமதாபாத் – 61400.00 ரூபாய்
ஜெய்ப்பூர் – 61400.00 ரூபாய்
லக்னோ – 61400.00 ரூபாய்
கோயம்புத்தூர் – 67000.00 ரூபாய்
மதுரை – 67000.00 ரூபாய்
விஜயவாடா – 67000.00 ரூபாய்
பாட்னா – 61400.00 ரூபாய்
நாக்பூர் – 61400.00 ரூபாய்
சண்டிகர் – 61400.00 ரூபாய்
சூரத் – 61400.00 ரூபாய்
புவனேஸ்வர் – 67000.00 ரூபாய்
மங்களுரூ – 67000.00 ரூபாய்
விசாகபட்டினம் – 67000.00 ரூபாய்
நாசிக் – 61400.00 ரூபாய்
மைசூர் – 67000.00 ரூபாய்
Gold price today 02 May 2022: Gold, silver price bounce back on inflation fear
Gold price today 02 May 2022: Gold, silver price bounce back on inflation fear; Check gold price in Chennai, Coimbatore, madurai, delhi, mumbai, gujart