குஜராத்: தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் 24 வயது பெண்ணால் இந்தியாவில் புதிய கலாச்சாரம் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக மணமகன் இல்லாமல் ‘தனக்கு தானே திருமணம் செய்து கொள்ளும்’ குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷமா பிந்து 24 வயது இளம்பெண். ஷமா பிந்துவுக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லையாம். அதனால் ‘Sologamy’ என்ற முறையில் தன்னைத் தானே மணம் முடித்துக் கொள் அவர் முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது, நான் ஒருபோதும் திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதில்லை. ஆனால் மணமகளாக இருப்பது பிடிக்கும். அதனால் என்னை நானே திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். இது குறித்து ஆன்லைனில் தேடிப் பார்த்தேன். இது போன்று யாரும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, நாட்டிலேயே சுய காதலுக்கு (Self Love) நான் தான் எடுத்துக் காட்டாக இருப்பேன் என நினைக்கிறேன் என்றார் ஷமா பிந்து.மேலும் தனது முடிவுக்கு பெற்றோர் முழு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் எனது திருமணம் ஜூன் 11-ம் தேதி நடக்கவுள்ளது. திருமணம் முடிந்த கையோடு இரண்டு வாரம் ஹனிமூன் ட்ரிப்பாக கோவா செல்கிறேன் என்று ஷமா பிந்து தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.