தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைப்பெறும் சந்திப்பில், மூத்த அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், சட்ட மசோதாக்களுக்கு விரைந்து அனுமதி தர வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பல்கலைக்கழக துணை வேந்தராக முதலமைச்சரை நியமனம் செய்யவேண்டும் உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், அதுக்குறித்தும் விரிவாக எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்குமுறை குறித்தும் ஆளுநருடனான சந்திப்பின் போது ஆலோசனை மேற்கொள்ளப்படுவதோடு, பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மேலும், 6 பேரின் விடுதலை தொடர்பாகவும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM