தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதன்முறையாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதிகள் குழு ஆப்கானிஸ்தான் சென்றுள்ளது.
அந்நாட்டிற்கு இந்தியாவிலிருந்து வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் குறித்து தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜே.பி.சிங் தலைமையிலான குழு காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பிற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இந்திய குழு சந்திக்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் இந்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையும் இந்த குழு பார்வையிடும் என கூறப்பட்டுள்ளது.