“நம்பிக்கையை இழப்பதற்கான நேரமல்ல இது"- தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி பேச்சு

குஜராத்தில், காங்கிரஸிலிருந்து ஹர்திக் படேல் விலகல், காங்கிரஸின் மூத்த தலைவரும், ஜி-23 தலைவர்களுள் ஒருவருமான கபில் சிபல் விலகல் மற்றும் கர்நாடக காங்கிரஸில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய பிரிஜேஷ் கலப்பா திடீர் விலகல் என காங்கிரஸில் அடுத்தடுத்து நாளும் திருப்புமுனையாகவே நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. இந்த மூன்று விலகல்களுமே, காங்கிரஸின் சிந்தனை அமர்வு கூட்டத்துக்குப் பிறகு நடந்து மிகப்பெரிய திருப்பங்களாகும்.

இந்த நிலையில், “நம்பிக்கையை இழப்பதற்கான நேரமில்லை இது” என காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நம்பிக்கையளித்துள்ளார்.

பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடத்தப்பட்ட ‘நவ் சங்கல்ப் ஷிவிர்’ கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “உத்தரப்பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் எப்படிப் போராடினார்கள் என்பதை இந்த முழு நாடுமே பார்த்தது. உதய்பூர் ஷிவிர் நிகழ்வில் தொண்டர்கள் போராடிய விதம் தங்களை மிகவும் ஈர்த்ததாக, பலரும் என்னிடம் கூறினர். சிரமம் பாராமல் போராடினாலும், தோற்றோம் என்பது உண்மைதான். ஆனால், நம்பிக்கையை இழப்பதற்கான நேரமல்ல இது. வருத்தப்பட நினைத்தவர்கள் போய்விட்டார்கள். ஆனால், இங்கு இருப்பவர்கள் போராடுவார்கள். இத்தகைய சவாலான சூழ்நிலையிலும் நீங்கள் வெளியேறவில்லை. கட்சி மற்றும் சித்தாந்தத்தில் நின்றீர்கள்” எனத் தொண்டர்களுக்கு உத்வேகமளிக்கும் விதமாக பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.