வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :ஆப்கன் மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் குறித்து பார்வையிடுவதற்காக, அந்நாட்டிற்கு இந்தியக் குழு சென்றுள்ளது.
ஆப்கனை கடந்த ஆண்டு தலிபான் அமைப்பு மீண்டும் கைப்பற்றி ஆட்சி புரிந்து வருகிறது. இந்தியா, ஆப்கனில் தலிபான் அரசை அங்கீகரிக்காத போதிலும், அங்குள்ள மக்களுக்கு மனிதநேயத்துடன் ஏராளமான நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது. 20 கோடி கிலோ கோதுமை, 13 ஆயிரம் கிலோ மருந்துகள், 5 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி மருந்து ஆகியவற்றைஆப்கனுக்கு இந்தியா வழங்கியுள்ளது.
![]() |
இந்நிலையில், வெளியுறவு துறையில் இணை செயலராக இருக்கும் ஜே.பி.சிங் தலைமையிலான குழு நேற்று ஆப்கன் சென்றது. இக்குழு, மனிதநேய அடிப்படையில் ஆப்கன் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து, ஐ.நா., அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவெளியுறவு துறை தெரிவித்துள்ளது. இக்குழு, தலிபான் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளது. ஆப்கனில் தலிபான் அரசு பொறுப்பேற்ற பின், அந்நாட்டிற்கு இந்தியக் குழு செல்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement