நீங்களும் தொடங்கலாம் அஞ்சல் நிலையம்: இந்தியா போஸ்ட் அசத்தல் அறிவிப்பு!

அஞ்சலகத்தில் முகவராக சேர்ந்து நீங்களே ஒரு அஞ்சலகம் போல் செயல்படுத்தலாம் என்று இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இன்னும் ஒரு சில கிராமப் பகுதிகளில் அஞ்சலகம் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த திட்டம் மிகவும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் இதன் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

அஞ்சல் துறை

இமெயில், இன்டர்நெட் என பல தகவல் தொழில்நுட்ப வசதி தற்போது வந்திருந்தாலும் இன்னும் அஞ்சல் துறைக்கு என ஒரு மதிப்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதிகாரபூர்வமான தபால்கள், அரசு தபால்கள் இன்னும் அஞ்சல் மூலம் தான் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அஞ்சல் நிலையம் மூலம் இளைஞர்களுக்கு சொந்த வணிகம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.

அஞ்சல் நிலையம்

அஞ்சல் நிலையம்

இந்தியாவில் தற்போது 1.56 லட்சம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இருப்பினும் இன்னும் ஒரு சில கிராமப் பகுதிகளில் அஞ்சல் நிலையங்கள் இல்லை. அஞ்சல் நிலையங்கள் தேவைப்படும் என்று நீங்கள் நினைக்கும் இடத்தை தேர்வு செய்து அதில் முகவராக சேரும் வாய்ப்பை அஞ்சல் நிலையம் தற்போது வழங்கியுள்ளது.

 முகவர்கள்
 

முகவர்கள்

அதுமட்டுமின்றி தனிநபர்கள் அஞ்சல் நிலையத்தில் ஏஜெண்டுகளாக இருந்து தபால் தலை உள்பட அனைத்து அஞ்சலக பொருட்களையும் கிராமப்புறங்களில் விற்பனை செய்யும் உரிமையையும் எடுத்துக் கொள்ளலாம் என்று அஞ்சல் நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதலீடு

முதலீடு

இதற்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டும் முதலீடு இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலக கிளை தொடங்கும் வாய்ப்பு அல்லது முகவர் ஆவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

அஞ்சல் நிலைய கிளை தொடங்க என்ன தகுதி?

அஞ்சல் நிலைய கிளை தொடங்க என்ன தகுதி?

அஞ்சலக முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் 18வயது நிரம்பி இருக்க வேண்டும்.

இந்தியக் குடிமகன்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு.

அஞ்சலக முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கனவே சிறிய கடைகளை கிராமங்களில் நடத்தி வருபவர்களும் முகவராக சேரலாம்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள், புதிய தொழில்மையம், கல்லூரிகள், பாலிடெக்னிக், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளிலும் அஞ்சல கிளையை தொடங்கலாம்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

அஞ்சல முகவராக வரும் தனிநபர்களுக்கு ஒரு பதிவு தபாலுக்கு மூன்று ரூபாய் கமிஷன் கிடைக்கும். அதேபோல் விரைவுத் தபால் புக் செய்தால் ரூ.5 கமிஷனும், மணிஆர்டர் செய்தால், ரூ.100க்கு ரூ.3.50 கமிஷனும், ரூ.200க்கு மேல் ரூ.5 கமிஷனும் கிடைக்கும். ஒரு மாதத்தில் 100 பதிவுத் தபால் செய்துவிட்டால், 20% கமிஷன் அதிகமாக கிடைக்கும். மேலும் அஞ்சல் தலை, கவர்கள், கார்டுகள் ஆகிய பொருட்களை விற்பதன் மூலம் 5 சதவீதம் வரை கமிஷன் கிடைக்கும்.

ரெவன்யூ ஸ்டாம்ப்

ரெவன்யூ ஸ்டாம்ப்

ரெவன்யூ ஸ்டாம்ப் விற்பனைக்கு 40% கமிஷன் தரப்படும். விரைவு பார்சல் ரூ.5 லட்சம் வரை புக் செய்தால் 10% கமிஷனும், பதிவுப் பார்சல் புக் செய்தால் 7% கமிஷனும் கிடைக்கும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.2.50 லட்சம் வரை ஸ்பீட் பார்சல் புக் செய்தால் 15 சதவீதம் கமிஷன் மற்றும் பதிவுத் தபால் புக் செய்தால், 10% கமிஷனும் கிடைக்கும். 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் ரூ.ஒரு கோடி வரை ஸ்பீட் பார்சல் புக் செய்தால் 20% கமிஷன் கிடைக்கும். அதேபோல் ஒரு கோடி முதல் ரூ.5 கோடி வரை ஸ்பீட் பார்சலுக்கு 25% கமிஷனும், ரூ.5 கோடிக்கு மேல் விரைவு பார்சலுக்கு 30% கமிஷனும் கிடைக்கும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

அஞ்சல் கிளை தொடங்கும் இடம் குறித்து விரிவான அறிக்கையை அஞ்சல் நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை அஞ்சல் நிலையத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பம் செய்யலாம். அஞ்சலக் கிளையை தொடங்கும் இடம் குறித்த தகவல் விரிவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பம்

விண்ணப்பம்

அதன் பின் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்ட பின்னர் அஞ்சல்துறையும், முகவராக வருவோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். விண்ணப்பத்தை அளித்த பின்னர், விண்ணப்பதாரரை தேர்வு செய்வதோ அல்லது நிராகரிப்பதோ மண்டலத் தலைவர் அதிகாரத்துக்கு உட்பட்டது. விண்ணப்பத்தைத் தாக்கல் செய்து 14 நாட்களுக்குள் அஞ்சல் கிளை தொடங்குவதற்கான அனுமதி குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India post: Start new business with 5000 rupees

India post: Start new business with 5000 rupees! | நீங்களும் தொடங்கலாம் ஒரு அஞ்சல் நிலையம்: இந்தியா போஸ்ட் அசத்தல் அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.