சென்னை: சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தினார். நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியதாக ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
