சீன தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து பல நாடுகளில் அதிகப்படியான முதலீட்டை செய்து பெரிய பெரிய திட்டங்களை உருவாக்கி பிற நாடுகளைப் பெரும் கடனில் மூழ்கடிக்கிறது. இதற்கான உதாரணம் தான் இலங்கை.
இலங்கை போலவே தற்போது நேபாளத்திலும் அதிகப்படியான முதலீட்டுச் செய்து கடன் வலையில் சிக்கவைத்துள்ளது மட்டும் அல்லாமல் அந்நாட்டு வேலைவாய்ப்புகளையும் சீனா அபகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லாக்டவுனில் தளர்வுகள்.. துள்ளிக் குதிக்கும் சீன மக்கள்.. இந்தியாவுக்கும் நல்ல விஷயம் தான்.. எப்படி?
3 சீனர்கள் மரணம்
கடந்த மாதம் நேபாளத்தில் சுமை ஏற்றிச் சென்ற மூன்று சீன குடிமக்களின் மரணம் அந்நாட்டு மக்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் பல பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. இந்த 3 சீன மக்களின் மரணம் மூலம் சீனா தனது குடிமக்களை அதிகளவில் நேபாளத்திற்கு வேலைக்கு அழைத்து வருவதும் அதன் மூலம் சொந்த நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாகவும் நேபாளில் பிரச்சனை வெடித்துள்ளது.
லோடர் விபத்து
ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் காத்மாண்டு-தேராய் (மாதேஷ்) ஃபாஸ்ட் ட்ராக்-ல் நடந்த வில் லோடர் விபத்து மூலம் இத்திட்டத்தில் அதிகளவிலான சீனர்களையும், சில நேபாளி தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு உள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.
சீனர்கள் எண்ணிக்கை
நேபாளில் இதுவரை எத்தனை சீனர்கள் பணியாற்ற அனுமதி பெற்று இருக்கிறார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாக வில்லை, இந்த மரணங்களுக்குப் பின்பும் காத்மாண்டு-தேராய் (மாதேஷ்) ஃபாஸ்ட் ட்ராக் திட்டத்தைச் செயல்படுத்தும் நேபாள் ராணுவம் தகவலை வெளியிடாமல் உள்ளது.
நேபாள இன்ஜினியர்கள்
சீனர்களின் வருகை காரணமாக அதிகப்படியான நேபாள இன்ஜினியர்கள் சொந்த நாட்டிலேயே வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். இதனால் நேபாள் நாட்டு மக்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குப் படையெடுப்பதாகவும் கூறப்படுகிறது.
175 பில்லியன் ரூபாய் திட்டம்
நேபாள் ராணுவத்தின் தலைமையில் மிகப்பெரிய போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த ஏப்ரல் 2017ல் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான மதிப்பு 175 பில்லியன் ரூபாய், இத்திட்டம் 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் கொரோனா உட்படப் பல காரணங்களுக்காகத் தாமதமாகி வருகிறது.
China snatching jobs from Nepal youth in expressway project
China snatching jobs from Nepal youth in expressway project நேபாள மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சீனா.. வெடித்தது புதிய பிரச்சனை..!