தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 1-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல – பொன்னையன்… அதிமுகவை பின்னுக்குத் தள்ளுகிறதா பாஜக?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Nellai D Muthuselvam
பாஜகவின் வளர்ச்சி திமுகவுக்குதான் சரிவை ஏற்படுத்தும். பாஜகவின் வியூகமே அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக இடத்தை பிடிப்பதுதான். பாஜக வளர்வது அஇஅதிமுகவுக்கு ஆபத்து என்பது மிகைப்படுத்தல் தான்.
Lakshmanan Lakshmanan
அதிமுக கட்சி சரியான நேரத்தில், சரியான கூட்டணி அமைக்க முடிவு எடுக்க தவறியதன் விளைவுதான் இன்றைய திமுகவின் வெற்றி !!
திரு.மோடி அவர்களை பின்தொடர்ந்து சென்றபின் வெற்று பேச்சு பேசி பலன் இல்லை !!!
Syed Amarulla
பாஜக வளர்வதுபோல் பில்டப்
BabuMohamed
அதிமுகவையும திமுகவையும் பாஜக ஒண்ணும்பண்ணமுடியாது….!பாஜக வளர்ந்தால்தானே…. பின்னுக்கு தள்ளமுடியும்….!
Kaviyanandh K
எங்கள் ( அதிமுக ) உடன் கூட்டணி வைத்ததால்தான் பாஜகவிற்கு 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்தாா்கள். இல்லையெனில் நோட்டாவையே தாண்டியிருக்காது பாஜக. என்றுமே அதிமுக – திமுக தான் போட்டியாளா்கள். பூனைக்கு மணிகட்டும் நேரம்வந்துவிட்டது. பாஜக எங்களுக்கு தேவையில்லை. பாஜகவின் உருட்டு இங்கே எடுபடாது. அதிமுக முதுகின் மீது ஏறி சவாாி செய்துவிட்டு இப்பொழுது நாங்கள் எதிா்க்கட்சி என்று திரு.அண்ணாமலை ஆட்டம் போட்டாலும் எடுபடாது. அதிமுக சாியான நேரத்தில் சாியான பணியை கடமையைச் செய்யும். திமுகவை வீழ்த்தும் திறன் அதிமுகவுக்கு மட்டுமே உண்டு. பாஜகவிற்கோ வேறு யாருக்கும் அந்த திராணி இல்லை இல்லை..
sindhangarments
அதிமுக தலைவர்கள் உணர்ந்ததுபோல் தெரியவில்லை. தலைவர்கள் சொத்துக்களை பாதுகாக்க வேறு வழியில்லை.
இதையும் படிங்க… “மடைதிறந்த வெள்ளம் போல பாஜகவின் வளர்ச்சி இருக்கும்”- பொன்னையன் கருத்துக்கு அண்ணாமலை பதில்
pradeepmba_vip0003
அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கு என்றால் ஒரு குழந்தையின் கையில் பொம்மையை கொடுத்தால் அந்தக் குழந்தை அந்த பொம்மையை கழுத்தை திருகி விடும் கையையும் திரும்பி விடும் ஒரு சில குழந்தை அந்த பொம்மையை துண்டாக பிரித்து விடும் அதுபோலதான் அதிமுகவின் நிலை மாறி இப்பொழுது இரண்டு குழந்தைகள் கையில் உள்ளது. ஒரு குழந்தை என்றாலே அந்த பொம்மையின் நிலைமை எப்படி இருக்கும்? இப்போது இரண்டு குழந்தைகள்(ops.,eps) இருக்கிறது அந்த போர்வை துண்டு துண்டாக ஒதுங்கி விடும் இதுதான் இந்த அதிமுகவின் நிலைமை?
இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM