பிரிட்டன் நாட்டின் புதிய விசா.. இந்தியர்களுக்கு பெரும் இழப்பு..!

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின்பு தனது வர்த்தகச் சந்தையையும், வேலைவாய்ப்பு சந்தையைப் பெரிய அளவில் வலிமைப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்யத் துவங்கிய போது பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்தது.

3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகள்: எச்டிஎஃப்சி வங்கி திட்டம்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் பிரிட்டன் தற்போது 8.1 சதவீத பணவீக்கத்தில் தவித்து வரும் நிலையில் அந்நாட்டு நிறுவனங்களில் திறமையானவர்களை ஈர்க்கும் வகையில் புதிய விசா-வை அறிமுகம் செய்துள்ளது.

புதிய விசா

புதிய விசா

போரிஸ் ஜான்சன் தலைமையிலான பிரிட்டன் அரசு High Potential Individual (HPI) விசா என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக உலகின் டாப் 50 கல்லூரிகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்குத் தங்களது கரியரை துவங்க பிரிட்டன் அரசு வாய்ப்பு அளிப்பதாக அறிவித்து இந்தப் புதிய விசா-வை அறிமுகம் செய்துள்ளது.

டாப் 50 கல்லூரிகள்

டாப் 50 கல்லூரிகள்

HPI விசா முலம் உலகின் டாப் 50 கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களுக்கு 2 வருடம் பணியாற்றுவதற்கான விசா வழங்கப்படுகிறது. பிஹெச்டி பட்டம் பெற்றவர்களுக்கு 3 வருட விசா வழங்கப்படுகிறது. மேலும் இந்த டாப் 50 கல்லூரிகளில் பட்டம் பெற்று 5 வருடத்திற்குள்ளேயே விண்ணப்பம் செய்ய முடியும்.

3 பட்டியல்
 

3 பட்டியல்

மேலும் டாப் 50 கல்லூரிகள் பட்டியலை உலகில் பல நிறுவனங்கள் வெளியிடும் நிலையில் பிரிட்டன் அரசு QS, Times Higher Education மற்றும் the Academic Ranking of World Universities ஆகிய 3 அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உலகின் டாப் 50 கல்லூரிகளைத் தீர்மானம் செய்கிறது.

இந்திய கல்லூரிகள்

இந்திய கல்லூரிகள்

தற்போது இதில் என்ன பிரச்சனை என்றால் இந்த டாப் 50 கல்லூரிகள் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரு கல்லூரிகள் கூட இல்லை என்பது தான். குறிப்பாக ஐஐடி, ஐஐஎம், கல்லூரிகள் கூட இல்லாதது பெரும் சோகம்.

பெரும் இழப்பு

பெரும் இழப்பு

இதனால் பிரிட்டன் அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள High Potential Individual (HPI) விசா-விற்கு இந்திய மாணவர்கள், இந்திய பட்டதாரிகள் விண்ணப்பம் செய்ய முடியாது என்பது இந்தியர்களுக்குப் பெரும் இழப்பாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Britain govt’s new High Potential Individual visa is bigg loss for India; Know Why..?

Britain govt’s new High Potential Individual visa is bigg loss for India; Know Why..? பிரிட்டன் நாட்டின் புதிய விசா.. இந்தியர்களுக்குப் பெரும் இழப்பு..!

Story first published: Thursday, June 2, 2022, 21:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.