பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் பிளாட்டினம் ஜூபிலியை கொண்டாடிவரும் வேளையில், அவரது மொத்த சொத்துமதிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ராணியார் இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் ஆட்சியாளராக இருந்தாலும், அவர் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் வரிசையில் இல்லை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் அவரிடத்தில் சொத்துக்கள் இருப்பது உண்மைதான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
பிரித்தானிய ராணியாரின் தனிப்பட்ட சொத்துமதிப்பு 365 மில்லியன் பவுண்டுகள் என தெரிய வந்துள்ளது.
ஆனால், பிரித்தானிய தொழிலதிபர்களான கோபி ஹிந்துஜா மற்றும் குடும்பத்தினரின் சொத்துமதிப்பு 28.47 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.
சர் ஜேம்ஸ் டைசன் மற்றும் குடும்பத்தினர் 23 பில்லியன் பவுண்டுகள் சொத்துமதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
மேலும், நாட்டின் முதல் 250 பணக்காரர்கள் என Sunday Times வெளியிட்டுள்ள பட்டியலில் இதுவரை ராணியாரின் பெயர் இடம்பெற்றதில்லை என்றே கூறப்படுகிறது.
ராணியாரின் பொழுதுபோக்குகளில் ஒன்றான அஞ்சல்தலை சேகரிப்பின் மொத்த மதிப்பு 100 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி அவருக்கு சாண்ட்ரிங்ஹாம் இல்லம் மற்றும் பால்மோரல் அரண்மனை சொந்தமாக உள்ளது.