பிரெஞ்சு ஓபன் : ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் மரின் சிலிச்..!

பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவும் ,குரேஷிய வீரர் மரின் சிலிச்சும் மோதினா்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 4 செட்களில் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றினா். வெற்றியை தீா்மானிக்கும் கடைசி செட்டும் டை பிரேக்கா் வரை நீடித்தது.

குரேஷிய வீரரான சிலிக் 5-7 6-3 6-4 3-6 7-6 (10-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளாா்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.