பிளாட்டினம் விழாவில் அசெளகரியங்களை உணர்ந்ததால்…நன்றி விழாவை புறகணிக்கும் பிரித்தானிய ராணி


பிரித்தானியாவில் வியாழன்கிழமை நடைப்பெற்ற பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களில் ராணி இரண்டாம் எலிசபெத் சில அசெளகரியங்களை அனுபவித்ததால், வெள்ளிக்கிழமை செயின்ட் பால்ஸ் கதீட்ரலில் நடைபெற உள்ள நன்றிச் சேவையை ராணி தவறவிடுவார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய ராணியின் 70 ஆண்டுக்கால ராஜாங்க ஆட்சியை போற்றும் வகையில் வியாழன்கிழமை ராணி இரண்டாம் எலிசபெத்திற்கான பிளாட்டினம் ஜூபிலி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிளாட்டினம் விழாவில் அசெளகரியங்களை உணர்ந்ததால்...நன்றி விழாவை புறகணிக்கும் பிரித்தானிய ராணி

இந்தநிலையில், பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள தகவலில், பிளாட்டினம் ஜூபிலி விழாவின் முதல் நாள் கொண்டாட்டங்களை பிரித்தானிய ராணி மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்டார்.

கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய ராணிக்கு வாழ்த்து சொன்ன வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்

இருப்பினும் பகலில் எபிசோடிக் இயக்கம் ஏற்படுத்திய சிக்கல்களினால் சிறிது அசெளகரியங்களை அனுபவித்தார், இதனால் வெள்ளிக்கிழமை செயின்ட் பால்ஸ் கதீட்ரலில் நடைபெற உள்ள நன்றிச் சேவையை ராணி தவறவிடுவார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

பிளாட்டினம் விழாவில் அசெளகரியங்களை உணர்ந்ததால்...நன்றி விழாவை புறகணிக்கும் பிரித்தானிய ராணி

பயணத்தின் நீளம் மற்றும் உடல்ரீதியான ஒத்துழைப்பு ஆகியவற்றின் காரணங்களாலும் ராணி இந்த முடிவைஎடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று இரவு விண்ட்சர் கோட்டையில் நடைபெறும் கலங்கரை விளக்க நிகழ்வில் பங்கேற்க ராணி ஆவலுடன் இருப்பதாகவும், மேலும் இன்றைய தினத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றார் என்று பக்கிங்காம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.      

பிளாட்டினம் விழாவில் அசெளகரியங்களை உணர்ந்ததால்...நன்றி விழாவை புறகணிக்கும் பிரித்தானிய ராணி



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.