பேரனுக்கு பட்டமளிப்பு விழா… பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான 80 வயது பெண்மணி


அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் 80 வயது பெண்மணி ஒருவர் துப்பாக்கி குண்டுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூ ஆர்லியன்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை பகல் சுமார் 11.45 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
மோரிஸ் ஜெஃப் உயர்நிலைப் பள்ளியில் தமது பேரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள 80 வயதான அகஸ்டின் கிரீன்வுட் சென்றுள்ளார்.

அங்கிருந்து விழாவிற்கு பின்னர் குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் உணவருந்த பல்ளிக்கு வெளியே தங்கள் காரில் சென்றுள்ளனர்.
அப்போது பள்ளி வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் பெண்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பேரனுக்கு பட்டமளிப்பு விழா... பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான 80 வயது பெண்மணி

அவர்களில் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சுட, அதில் ஒரு குண்டு அகஸ்டின் கிரீன்வுட்டின் தலையில் பாய்ந்துள்ளது.
மேலும், அடையாளம் தெரியாத ஆண்கள் இருவர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால் இருவருக்கும் லேசான காயமே ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனிடையே மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு அழைக்கப்பட்டு அகஸ்டின் கிரீன்வுட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் மதியத்திற்கு மேல் அகஸ்டின் கிரீன்வுட் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

பேரனுக்கு பட்டமளிப்பு விழா... பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான 80 வயது பெண்மணி

இந்த நிலையில், அகஸ்டின் கிரீன்வுட்டின் மகள் ஜெரால்டின் தமது தாயார் தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், வன்முறையை மக்கள் கைவிட வேண்டும் எனவும், இன்று எனது உலகத்தை என்னிடம் இருந்தும் எனது குடும்பத்தினரிடம் இருந்தும் பறித்துக்கொண்டாய்.

எங்கள் குடும்பத்திற்கு தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்திவிட்டு, நீ கடந்து சென்று விட்டாய் என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, நியூ ஆர்லியன்ஸ் நகர பொலிசார் இந்த வழக்கு தொடர்பில் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சிலரை விசாரித்துள்ளதாகவும், ஆனால் கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

பேரனுக்கு பட்டமளிப்பு விழா... பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான 80 வயது பெண்மணி



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.