இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இறக்குமதி பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியது.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 369 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்தியதாக இலங்கை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நிய செலாவணி செலவை குறைக்கவே வெளிநாட்டு பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய வங்கிகளுடன் சேர்ந்து, இறக்குமதியாளர்களுக்கு போதுமான அந்நியச் செலாவணியை பெற உறுதிப்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.