உக்ரைன் போருக்குத் தப்பி சுவிட்சர்லாந்துக்கு அகதிகளாக வந்தவர்கள் என்ன செய்கிறார்கள்?
சுவிஸ் புலம்பெயர்தல் மாகாணச் செயலகம், 54,000 அகதிகள் உக்ரைன் போருக்குத் தப்பி சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்களில் 51,000 பேருக்கு சுவிட்சர்லாந்தில் வேலை செய்வதற்கான சிறப்பு S status வழங்கப்பட்டுள்ளது.
அந்த பணி அனுமதிகளில் பெரும்பான்மை ஹொட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணி செய்வதற்கும், அதற்கு அடுத்தபடியாக, கல்வி மற்றும் விவசாயத்துறைகளில் பணி செய்வதற்கும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், உக்ரைன் அகதிகள் ஒரு வருடத்திற்கு சுவிட்சர்லாந்தில் வாழ தற்காலிக வாழிட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. போர் தொடருமானால், இந்த அனுமதியை நீட்டித்துக்கொள்ளலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு தங்குமிடம், சமூக உதவிகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படும்.
அவர்கள் சுவிஸ் தொழிலாளர் சந்தையில் உடனடியாக இணைவதுடன், தங்கள் குடும்பத்தினரையும் சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வரலாம். பிள்ளைகள் பள்ளிகளில் சேர்ந்து படிக்கலாம்.
மொத்தத்தில், உக்ரைனிலிருந்து அகதிகளாக சுவிட்சர்லாந்து வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு வேலை கிடைத்துள்ளது, அவர்கள் போர் முடியும் வரை குடும்பத்துடன் சுவிட்சர்லாந்தில் தங்கலாம்…