உக்ரைனியர்களின் வலிகளுக்கு அமெரிக்கர்கள் பழகிக் கொள்ளவேண்டாம் என உக்ரைனின் முதல் பெண்மனி ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது 100 நாள்களை தொட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் தங்களது தாக்குதலை தீவரப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், உக்ரைனின் முதல் பெண்மனி ஒலேனா ஜெலென்ஸ்கா ABC செய்தி நிறுவனத்திற்கு அளித்த முதல் தனிப்பேட்டியில், உக்ரைனியர்களால் உணரப்பட்ட வலி மற்றும் தற்போதைய மோதல்களை அமெரிக்கர்கள் பழகிக் கொள்ளாதீர்கள் என எச்சரித்துள்ளார்.
இந்த போரானது முடிவு இல்லாத நிலைக்கு சென்று கொண்டு இருப்பதாகவும், இது நாம் விரும்பக்கூடிய ஓன்றல்ல என்று கூறிய ஒலேனா ஜெலென்ஸ்கா, அமெரிக்கர்களே இந்த போருக்கு பழகிக் கொள்ளாதீர்கள், இந்தப்போர் வெகு தொலைவில் நடத்தப்படலாம், சில தொலைதூர பிரதேசங்களில் இருக்கலாம், இந்தப் போர் ஏற்கனவே நீண்ட காலங்கள் நடத்தப்பட்டுவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த போரினால் எங்களது நாட்டு மக்களின் குடும்பங்கள் பிரிந்து கிடக்கின்றன என்று அமெரிக்கர்களுக்கு ஏதேனும் செய்திகள் உள்ளதா என்று நிருபர் கேட்டதற்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்கு எதிராக…பயங்கர ஆயுதங்களை வாங்கி குவிக்க தயாராகும் மால்டோவா
ஒலேனா ஜெலென்ஸ்கா அளித்த இந்த பேட்டியின் போது அபாய ஒலி எழுப்பபட்டதால் பேட்டி பாதியில் நிறுத்திக் கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.