இந்தியா முழுவதும் அனைத்து உணவு பொருட்களின் விலை உயர்ந்த காரணத்தால் இத்துறையைச் சார்ந்த MSME நிறுவனங்கள் விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது.
ஏற்கனவே பெரு நிறுவனங்கள் அனைத்து துறையிலும் சிறு நிறுவனங்களைக் கைப்பற்றி வரும் நிலையில் போதிய நிதி ஆதாரம் இல்லாத MSME நிறுவனங்களை இந்த விலைவாசி உயர்வு தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்..
இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்.. சமையல் எண்ணெய் விலை எப்போது குறையும்?
மணப்பாறை முறுக்கு
மணப்பாறை முறுக்கு-கிற்கு இந்தியாவில் அறிமுகம் தேவையில்லை, தமிழ்நாட்டின் திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணப்பாறை-யை மையமாக வைத்து உருவான இந்த முறுக்கு தமிழ்நாட்டின் 24 தனித்துவமான தயாரிப்புகளின் பட்டியலில் உள்ளது, அதிலும் முக்கியமான புவிசார் குறியீடு அங்கிகாரத்தை வாங்குவதற்காகக் காத்திருக்கிறது.
MSME மற்றும் குடிசை தொழில்கள்
நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் மணப்பாறை முறுக்கு உற்பத்தி என்பது பெரிய நிறுவனங்களைக் காட்டிலும், MSME மற்றும் குடிசை தொழில்கள் தான் அதிகளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.
அடுக்கடுக்கான பிரச்சனை
இந்நிலையில் இந்தியாவில் தற்போது உருவாகியுள்ள உற்பத்தி பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவை மணப்பாறை முறுக்கு உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மணப்பாறை முறுக்கின் முக்கியமான USP என்றால் அதன் குறைவான விலையும், 30 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும் நிலை தான்.
பாமாயில்
இப்படியிருக்கும் நிலையில் மணப்பாறை முறுக்குத் தயாரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் பாமாயில் விநியோகத்தில் இந்தோனேஷியாவின் ஏற்றுமதி தடைக்குப் பின்பு இதன் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்து இப்பிரிவில் இருக்கும் மக்களை அதிகளவில் பாதித்தது. 900 ரூபாயாக இருந்த 15 லிட்டர் பாமாயில் தற்போது 2300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடன் இல்லை
பொதுவாக மணப்பாறை முறுக்குத் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் கடன் அடிப்படையில் பாமாயில் வாங்குவார்கள், ஆனால் தொடர் விலையேற்றத்தின் காரணமாகப் பணத்தைக் கொடுத்த பின்பு எண்ணெய் வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
புவிசார் குறியீடு
இதனால் மணப்பாறை முறுக்கு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலும், இதன் மூலம் ஏற்படும் வர்த்தகப் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் இப்பிரிவு நிறுவனங்கள். இதனால் தமிழ்நாட்டு மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர்களுக்குப் புவிசார் குறியீட்டை பெறுவதை விடப் பணவீக்க பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டியது முக்கியமானதாக உள்ளது.
பணப் புழக்க பாதிப்பு
இந்த விலைவாசி உயர்வையும், பணப் புழக்க பாதிப்புகளையும் தாக்குப்பிடிக்க முடியாத சிறு குறு தொழில்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட வேளையில் பாமாயில் ஏற்றுமதி தடைகள் நீக்கப்பட்டு வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்பத் துவங்கியுள்ளது. ஆனால் பாதிப்பு முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.
500க்கும் அதிகமான குடும்பங்கள்
திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணப்பாறையில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் முறுக்குத் தயாரிப்பில் உள்ளது. இதைத் தவிரத் தமிழ்நாடு முழுவதும் பல வகை முறுக்கு தயாரிக்கும் நிறுவனங்களும், தொழில்களும் இதேபோன்ற பாதிப்பை தான் எதிர்கொண்டு வருகின்றது.
Manapparai murukku business in Tamilnadu impacted on palm oil and food price hike
Manapparai murukku business in Tamilnadu impacted on palm oil and food price hike மணப்பாறை முறுக்கு-கிற்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா..!