2021- 22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில் இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அன்று வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு (87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
‘கலைஞர் எழுதுகோல் விருது’க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்கள் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 2021-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (3.6.2022) வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்..
வசனகர்த்தா ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது- அரசு அறிவிப்பு