ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்! இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை சூப்பராக இருக்கப்போகுதாம்



2022 ஜூன் 3 ஆம் தேதி புதன் ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

புதன் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கும் போது பல ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம்.

தற்போது புதன் ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதை காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் நிதி பக்கம் வலுவாவது மட்டுமின்றி, குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இக்காலத்தில் பேச்சுத் திறமையால் எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள்.

நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. கடனை வாங்கும் போது, கவனமாக இருங்கள். வெளியாட்கள் உங்கள் வெற்றியைத் தடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் அதை நன்கு அறிந்து சிறப்பாக கட்டுப்படுத்துவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். காதல் திருமணம் செய்யும் முடிவை எடுக்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலத்தில் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். அதிக தொண்டு செய்வீர்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய அல்லது வெளிநாடுகளில் குடியேற மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.  

கடகம்

கடக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் அனைத்து வகைகளிலும் நன்மைகள் கிடைக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிப்பது மட்டுமின்றி, எடுக்கும் முடிவுகள் மற்றும் செய்யும் பணிகளும் பாராட்டைப் பெறும்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் ஆதரவு இருக்கும். இக்காலத்தில் உத்திகளையும் திட்டங்களையும் ரகசியமாக வைத்துக் கொண்டு செயல்பட்டால், எல்லா வகையிலும் வெற்றி பெறுவீர்கள். வேலை அல்லது வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இது சிறந்த காலம்.  

சிம்மம்

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், சமூக அந்தஸ்தும் உயரும். உங்களின் பொறுப்புக்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.

கன்னி

கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, உங்கள் திறமையால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள்.

உங்களின் பணிகள் இக்காலத்தில் பாராட்டப்படும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன், குறிப்பாக இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர அனுமதிக்காதீர்கள்.

துலாம்

துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் வாழ்வில் பல எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பீர்கள். ஒவ்வொரு வேலையையும், முடிவையும் மிகவும் கவனமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

வேலையில் தடைகள் ஏற்பட்டால் உடனே மன அழுத்தம் கொள்ளாதீர்கள். ஏனெனில் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகள், சரும நோய்களால் பாதிக்கப்படலாம். எனவே கவனமாக இருங்கள். பணியிடத்தில் வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டிற்கு வரவும். முடிந்தவரை சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை வெற்றியடையும். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலம் நல்ல காலம் என்று கூற முடியாது. ஏனெனில் இக்காலத்தில் ரகசிய எதிரிகள் அதிகம் இருப்பார்கள்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்களை அவமானப்படுத்த நினைப்பார்கள். சர்ச்சைகள், தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளை பேசி தீர்க்கவும். ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருங்கள். இந்த காலகட்டத்தில் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்கள் மூலம் விரும்பத்தகாத செய்திகள் வரலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் மாணவர்களுக்கு இக்காலம் நல்ல காலம் அல்ல. இக்கால கட்டத்தில் ஏதேனும் பெரிய வேலைகள் தொடங்க வேண்டும்

என்றாலோ அல்லது யாரேனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தாலோ, அதன் விளைவும் மிகவும் சாதகமாக இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்ள நினைத்தால், அதற்கான வாய்ப்புக்கள் அமையும். திருமணமான தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் பல எதிர்பாராத பலன்களைத் தருவார். நிலச் சொத்து, மூதாதையர் சொத்துப் பிரச்னைகள் தீரும். வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். உங்கள் உத்திகள் மற்றும் திட்டங்களை ரகசியமாக வைத்து நீங்கள் வேலை செய்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலத்தில் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும், அதை செய்து முடிப்பீர்கள். எடுத்த முடிவும் செய்த பணியும் பாராட்டப்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிக தொண்டு செய்வீர்கள். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற உங்களின் விருப்பம் நிறைவேறும். இக்காலத்தில் உங்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.