இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சமீபத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தினார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில், தற்போது ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட சில வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில், கடன் வாங்கியவர்களுக்கு இனிமேல் திண்டாட்டம்தான் என்பது தெரியவருகிறது.
3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகள்: எச்டிஎஃப்சி வங்கி திட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து நேற்று முதல் அதாவது ஜூன் 1-ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டிஎஃப்சி, எஸ்பிஐ ஆகிய வங்கிகள், வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன.
ரிசர்வ் வங்கி
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் அனைத்து வங்கிகளும் தாங்கள் தரும் வீட்டு கடனுக்கு வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக்கடன்
இந்தியாவில் அதிகளவில் வீட்டுக்கடன் வழங்கியுள்ள எச்டிஎஃப்சி வங்கி 5 புள்ளிகள் வரை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. ஏற்கனவே வீட்டுக் கடனுக்கு கடன் வாங்கியவர்கள் 35 புள்ளிகள் வட்டியை செலுத்தி வரும் நிலையில் தற்போது 40 புள்ளிகள் என்ற நிலையில் வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடன் வாங்கியவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக உள்ளது.
எச்டிஎஃப்சி வங்கி
இந்த வட்டி விகிதம் உயர்வு காரணமாக எச்டிஎஃப்சி வங்கியில் 30 லட்சம் வீட்டுக் கடன் பெற்றவர்கள் இனிமேல் 7.15 சதவீதமும், 30 லட்சத்திற்குமேல் 75 லட்சம் வரை கடன் பெற்றவர்கள் 7.40 சதவீதமும், வரையிலும் 75 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவர்கள் 7.5 சதவீதம் வரையிலும் வட்டி கட்டவேண்டும் என்பது குறிபிடத்தக்கது.
கிரெடிட் ஸ்கோர்
பெண் வாடிக்கையாளர்களாக இருந்தால் 5% வட்டி குறைவாக இருக்கும். அதே போல் கிரெடிட் ஸ்கோர் 780க்கு மேல் இருந்தால் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியும் வீட்டு கடனுக்கு எம்எல்சிஆர் விகிதத்தை 30 ஆக உயர்த்தியுள்ளது. எம்எல்சிஆர் என்பது வங்கிகள் குறிப்பிட்ட சதவீதத்துக்கு குறைவாக கடன் வழங்கக் கூடாது என்பது ஆகும். ஐசிஐசிஐ வங்கி ஜூன் 1-ஆம் தேதி முதல் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை 40 புள்ளிகளாக உயர்த்தியுள்ளதால் வட்டி விகிதம் 8.10 என அதிகரித்துள்ளது.
தனியார் வங்கிகள் தான் வட்டியை உயர்த்தி உள்ளன என்றால் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவர்கள் 7.05 சதவிகிதம் வட்டி கட்ட வேண்டும்.
பொதுவாக வங்கிகளில் கடன் வாங்கி வீடு வாங்க வேண்டாம் என பொருளாதார நிபுணர்கள் கூறி வரும் நிலையில், அதையும் மீறி வங்கிகளில் கடன் வாங்கி வீடு வாங்கியவர்களுக்கு இந்த வட்டி விகித உயர்வு பெறும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
HDFC hikes home loan interest rates, ICICI Bank, PNB increase MCLR
HDFC hikes home loan interest rates, ICICI Bank, PNB increase MCLR | HDFC hikes home loan interest rates, ICICI Bank, PNB increase MCLR |வட்டியை உயர்த்திய ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள்: கடன் வாங்கினால் இனி திண்டாட்டம் தான்!