நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியிலிருந்து மே மாதம் 15ம் திகதி வரையான பகுதியில் இடம்பெற்ற கொள்ளை, கொலை, தீ வைப்பு உள்ளிட்ட சொத்து மற்றும் உயிர் சேதம் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதியரசர் டீ.P அலுவிஹார ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்ஹ மற்றும் மேலதிக பிரதான மதிப்பீட்டாளர் என்.ஏ.எஸ்.வசந்த குமார ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் புவனேக ஹேரத் குழுவின் செயலாளராகப் பணியாற்றுவார்.