நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விசா கிடைப்பதில் காலதாமதம் ஆனது. இதனால், அமெரிக்கா செல்லும் திட்டமும் தள்ளிப்போனது.
இந்நிலையில், டி.ராஜேந்திரனுக்கு விசா கிடைத்துள்ளதை அடுத்து, அவர் இன்னும் இரண்டு நாட்களில் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்..
நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்- ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்