வாஷிங்டன்,
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தற்போது 100-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன.
குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு அதி நவீன நீண்டதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ராக்கெட் அமைப்புகளை அமெரிக்கா வழங்கவுள்ளதாக நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிபர் ஜோ பைடனை நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வெள்ளை மாளிகையில் இன்று சந்திக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், ” அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை வியாழன் அன்று வெள்ளை மாளிகையில் சந்திப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் உக்ரைன்- ரஷியா இடையே 100- வது நாட்களாக தொடர்ந்து நடக்கும் போர் குறித்து அவர்கள் ஆலசோனை செய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.