கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த 369 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
குறித்த 369 பொருட்களை இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் Import Control Licence இன்றி, நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் வரிகளுக்கு ஏற்ப இறக்குமதி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் திறந்த கணக்கு கட்டண மாற்றங்களை implementation of open-account payment ஜூன் 7 ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளதுடன் மேலும் இதுபோன்று அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்யலாம் எனவும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்கவும், இறக்குமதியாளர்களின் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்யவும், அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய வேண்டும் என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.