மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக அரசிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்க உள்ளது.
அடுத்த மாதம், அதாவது ஜூலை மாதத்திற்குள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
ஜூலை 1 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கான DA அளவு மீண்டும் உயர்வை மத்திய அரசு அமல்படுத்த வாய்ப்புள்ளது.
இலங்கை அரசு வரி உயர்வு.. அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு.. ஆடம்பர பொருட்களுக்கு செக்..!
நுகர்வோர் விலைக் குறியீடு
அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி-யை மத்திய அரசு திருத்தி அறிவிக்கப்படும். இந்த ஆண்டு ஜனவரியில், 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்தது.
4 சதவீதம் வரை உயரும்
ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் AICPI 126க்கு மேல் இருந்தால் அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயரக்கூடும் என சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
அகவிலைப்படி
ஜனவரி மற்றும் பிப்ரவரியில் ஏஐசிபிஐ முறையே 125.1 மற்றும் 125 ஆக இருந்தது, மார்ச் மாதத்தில் அது 126 ஆக உயர்ந்ததுள்ளது. இப்போது, ஏஐசிபிஐ உயர்ந்துள்ள நிலையில் டிஏ 4 சதவீதம் வரையில் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
38 சதவீத அகவிலைப்படி
தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதம் டிஏ வழங்கப்படுகிறது. ஜூலை மாதம் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டால், அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து சுமார் 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். அகவிலைப்படி (DA) என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் அகவிலை நிவாரணம் (DR) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கணக்கீடு
தற்போதைய சந்தை கணிப்பின் படி 38 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்பட்டால் 18,000 அடிப்படை ஊதியம் உள்ள ஒரு ஊழியரின் சம்பளம் வைத்து கணக்கிடுவோம். தற்போது 34 சதவீத டிஏ விகிதத்தில், ஊழியர் ரூ.6,120 டிஏ பெறுகிறார். ஜூலையில் அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியருக்கு ரூ.6,840 டிஏ கிடைக்கும். அதாவது ரூ.720 அதிகரிக்கும். இது ஒவ்வொரு பிரிவு பணிகளுக்கு மாறுபடும்.
7th pay commission: Govt may Set to Increase DA in july
7th pay commission: Govt may Set to Increase DA in july 7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!