Elon Musk Twitter: எலான் மஸ்க் தும்மினாலும் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளார். அவரது ஒவ்வொரு ட்வீட்டுகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், dogecoin உருவாக்கியவருக்கு ஒரு பதிலடி ட்விட்டை மஸ்க் பகிர்ந்துள்ளார்.
இது, இணையத்தில் ஹாட் டிரெண்டிங் ஆவதற்கு முக்கிய காரணம் டாஜ் காயினுக்கும், எலான் மஸ்கிற்கும் இருக்கும் தொடர்பு தான். டாஜ் காயினை உருவாக்கியவர்களுள் ஒருவரான ஜாக்சன் பால்மர் (Jackson Palmer) ஒரு ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
Elon Musk: எலான் மஸ்க் போட்ட ஒரு பதிவில் ஆடிப்போன ட்விட்டர்!
பரபரப்பாகப் பேசப்படும் பால்மர் கருத்து
அப்போது, அவர்கள் எலான் மஸ்க் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பால்மர், “ட்விட்டரில் கிரிப்டோ மோசடிகளை அடையாளம் காண உதவும் ஒரு போட்டை உருவாக்கிய பிறகு, பல ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் மஸ்கிற்கு செய்தி அனுப்பியிருந்தேன்.
Find My Phone: ஸ்மார்ட்போன் திருடப்பட்டால் இந்த 5 விஷயத்த மட்டும் செஞ்சா போதும்!
அதனை மஸ்க் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். பைதான் ஸ்கிரிப்டை எப்படி இயக்குவது என்பது மஸ்க்கிற்குத் தெரியாது. அவருக்கு கோடிங் குறித்து எந்த அறிவும் இல்லை.” என்று பால்மர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எலான் மஸ்க்கிற்கு வெறும் வாய் ஜாலம் மட்டுமே தெரியும். மனதில் பட்டது என்றேனும் நடக்கும் என்ற நம்பிக்கையில் பயணிப்பவர். தானியங்கும் டெஸ்லா கார்கள் மீதும் இதுபோன்ற நம்பிக்கை தான் அவர் வைத்துள்ளார். அவர் ஒரு கிரிஃப்டர்” என்றார் பால்மர்.
WhatsApp Update: செய்தியை அனுப்பினாலும் திருத்த முடியும் – வாட்ஸ்அப் புதிய அப்டேட்!
எலான் மஸ்க் பதிலடி
சும்மா இருந்தேலே தனது ட்வீட்டுகள் மூலம் வம்பிழுக்கும் Elon Musk, இப்படி ஒருவர் தன்னை குறித்து பேசினார் என்றால் சும்மாவா இருப்பார். தனக்குரிய ஸ்டைலில் ஒரு ட்விட்டை தட்டினார். இதுதான் சமூகவலைத்தளங்களில் இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
எலான் மஸ்க் ட்விட்டர் பதிவில், “12 வயதிருக்கும்போதே என் குழந்தைகள் சிறந்த கோடிங்கை எழுதுவர். அவை பால்மர் அனுப்பிய கேடிங்கை விட சிறந்ததாக இருக்கும். ஜாக்சன் பால்மர் கோடிங் மீது நம்பிக்கை இருந்திருந்தால், அவரே முன்வந்து அதனை உலகறிய செய்திருப்பார்.
iPhone 13 Clone: வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ ஐபோனா?
டாஜ் காயின்
“நச்சு” கலாச்சாரத்தை மேற்கோள் காட்டி, 2015 ஆம் ஆண்டில் dogecoin உடன் இருந்த உறவை முறித்துக் கொண்டார் பால்மர். ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி, 2018 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஸ்கிரிப்டை தாங்கள் இயக்க முயற்சிப்பதாக தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். ஸ்கேமர் தந்திரங்கள் அதிநவீனமாகிவிட்டதால், பழைய குறியீடு பயனுள்ளதாக இருக்காது என்று பால்மர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
ட்விட்டரை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ள மஸ்க் அதோடு நிற்கவில்லை. மஸ்க் தொடர்ந்து ஊக்குவித்து வரும் கிரிப்டோகரன்சியான Dogecoin உடன் பால்மரின் ஈடுபாட்டை அவர் கேள்வி எழுப்பினார்.
ட்விட்டரில் மீம் நாணயத்திற்கு மஸ்க் அளித்த ஆதரவு, நாணயத்தின் மதிப்பை பலமுறை தூக்குப்பிடித்தது. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை அதன் சில வணிகப் பொருட்களுக்கான கட்டணமாகவும் dogecoin-ஐ ஏற்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.