இலங்கையில் மக்கள் போராட்டம் குறைந்தாலும் இன்னும் பொருளாதாரம், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவை இன்னும் மோசமான நிலையில் தான் உள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசு ஒருபக்கம் ஐஎம்எப், உலக வங்கி ஆகியவற்றிடம் இருந்து கடன் பெற முயற்சித்து வரும் வேளையில், மறுபுறம் வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வருகிறது. இந்த முதலீடுகளை ஈர்க்க அனைத்து விதமான சலுகைகளையும் அளிக்கத் தயாராகியுள்ளது இலங்கை.
ஐபிஓவில் முதலீடு செய்ய போகிறீர்களா? 5 புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
இதை விட்டு வைப்பாரா அதானி..!
நிதி நெருக்கடி
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை 1948 ஆம் ஆண்டுச் சுதந்திரம் அடைந்த பின்னர் மிகவும் மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறது. நிதி நிலை மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்த இந்த ஆண்டுக்குள் 1 பில்லியன் டாலர் அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டை திரட்ட வேண்டும் என்பதில் இலங்கை அரசு முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
இந்த இலக்கின் முதல் கட்டமாக இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தளத்தை அமைப்பதற்கான மருபேனி கார்ப் மற்றும் இந்தியாவின் அதானி குழுமம் விருப்பம் தெரிவித்து அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என இலங்கை முதலீட்டு வாரியத்தின் (BoI) இயக்குநர் ஜெனரல் ரேணுகா வீரகோன் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம்
மருபேனி நிறுவனம் சுமார் 800 மெகாவாட் (மெகாவாட்) சோலார் மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி தளத்தை அமைப்பதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது. இதேபோல் அதானி குழுமம் ஏற்கனவே 500 மெகாவாட் மின்சார உற்பத்தி திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை முடித்துள்ளது. இத்திட்டம் அடுத்த 18-24 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன நிறுவனங்கள்
மருபேனி கார்ப் மற்றும் அதானி குழும்ம நிறுவனங்களைப் போலவே இரண்டு சீன நிறுவனங்களும் இதேபோன்ற கிரீன் எனர்ஜி திட்டங்களில் முதலீடு செய்யவும், வர்த்தகத்தை உருவாக்கவும் முயற்சி செய்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் இலங்கை அரசு தனது எனர்ஜி கொள்கையை மறு சீரமைப்புச் செய்ய ஆலோசனை செய்ய வருகிறது.
226 மில்லியன் டாலர் முதலீடு
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 226 மில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது 2021 முதல் காலாண்டை காட்டிலும் 16 சதவீதம் அதிகமாகும்.
1.46 பில்லியன் டாலர் திட்டம்
இதேபோல் இலங்கை முதலீட்டு வாரியம் தற்போது 1.46 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியா, சீனா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 49 முதலீட்டுத் திட்டங்களை முடிவு எடுக்கக் காத்திருக்கிறது.
Gautam Adani planning to invest in Sri Lanka; Soon crisis economy eyes $1 billion FDI
Gautam Adani planning to invest in Sri Lanka; Soon crisis economy eyes $1 billion FDI சரியான நேரத்தில் இலங்கையில் முதலீடு செய்யும் அதானி..!