திருமலை: ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், அச்சுதாபுரத்தில் உள்ள பிராண்டிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட போரஸ் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிந்தது. இதனால் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மயக்கம், மூச்சு திணறல் வாந்தி ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.