வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழி தான் எனக்கூறியுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திற்கு எந்த மொழியும் குறைந்தது அல்ல எனக்கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த தேசிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த சில நாட்களாக, மொழி குறித்த விவாதங்களில் பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, அசாமி, வங்காளம் அல்லது மராத்தி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான். ஹிந்தி, ஆங்கிலத்திற்கு எந்த மொழியும் குறைந்தது இல்லை. ஒவ்வொரு மொழியும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் தான், புதிய கல்விக்கொள்கையில், அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக்கொள்கையை சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எங்களுக்கு தெரியும். அதில், மத்திய அரசுக்கு எந்த பிரச்னை இல்லை. மக்கள் நலனுக்காக அந்த முடிவை எடுத்துள்ளீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதனையும் நாங்கள் ஏற்று கொள்வோம். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.
Advertisement