இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு “வலியை” உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் குழு, மூளையில் இருந்து வரும் தரவுகளுக்கு பதிலளிக்கக்கூடிய பெரிய அளவிலான எலக்ட்ரானிக் தோலை உருவாக்குவதற்கு இது முன்மாதிரியாக இருக்கும் என்றும் மனித உடலில் உள்ள உணர்ச்சி நியூரான்கள் செயல்படும் விதத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.