லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று (ஜூன் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் விக்ரம்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு கமல் திரையில் தோன்றியிருப்பதோடு மட்டுமல்லாமல் அவரது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜின் இயக்கத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு மேலோங்கியிருந்தது.
இன்று படம் ரிலீசான நிலையில், நேற்று கமல் ஹாசன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை விட்டிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை பார்ப்பதற்கு முன்பு ஒரு முறை கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி படத்தை பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனிடையே தற்போது ரிலீசாகியிருக்கும் விக்ரம் படம் 1986ல் வெளியான கமலின் விக்ரம் படத்தின் சீக்வல் பார்ட்டாக இருக்கும் என பேசப்பட்டு வந்ததால் பலரும் பழைய விக்ரம் படத்தை தேடி பிடித்து பார்த்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கைதி படத்தை பார்த்துவிட்டு தற்போதை விக்ரம் படத்தை பாருங்கள் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது ரசிகர்களை ஆவலை தூண்டியிருந்தாலும் வழக்கம் போல நெட்டிசன்களின் கிண்டலில் இருந்து தப்பவில்லை.
kaithi ya?? idhu theriyaama naanga oru naalanju dhadava palaiya vikram a paathutome pa #VikramFromTomorrow pic.twitter.com/nGkgfCC6SL
— Jay (@jayjaytalkies) June 2, 2022
அதன்படி, ட்விட்டர்வாசி ஒருவர் “கைதியா? இது தெரியாம நாலஞ்சு தடவ பழைய விக்ரம் படத்தை பாத்துட்டோமே பா” என அவர் பதிவிட்ட ட்வீட் படு வைரல். மேலும், என் ஜோடி மஞ்சக்குருவி பாட்டுக்கு டான்ஸ் ஆடினதுலாம் வேஸ்ட்டா போச்சு என்றும் அவர் கமெண்டில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பல இணையவாசிகளும், பழைய விக்ரம் படத்தைதான் நாங்களும் பார்த்தோம் என்றும், சேம் ஃபீலிங் என்றும் பதிவிட்டுள்ளனர்.