கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தம் செய்யப்பட்டு வணிகம் எளிதாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி,
இந்தியாவின் செயல் திறனை பார்த்து உலகமே பாராட்டுகிறது என்று பெருமிதத்துடன் கூறினார். கடந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 84 பில்லியன் டாலர், அதாவது சுமார் ஆறரை லட்சம் கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா ஒரு வலுவான நாடாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்தரப்பிரதேசம் சிறப்பான உத்வேகத்தை கொடுக்கும் என்று நம்புவதாகக் கூறிய பிரதமர், 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதால், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவார்கள் எனக் கூறினார். முன்னதாக மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு, கண்ணாடியால் செய்யப்பட்ட ராம் தர்பாரின் பிரதியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM