இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. சென்னையில் என்ன நிலவரம்..!

இந்தியாவில் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்தது.

ஆனால் தற்போது புது புது வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதான் காரணமாக படித்து முடித்தவுடனே பல இளைஞர்களுக்கு வேலை கிடைத்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் மட்டும் வேலை வாய்ப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகமாக கிடைத்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சரியான நேரத்தில் இலங்கையில் முதலீடு செய்யும் அதானி..!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்த நிலையில் வேலை வாய்ப்பு குறித்த இணையதளத்தை நடத்திவரும் நவுக்ரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் நடப்பாண்டில் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இந்த ஆண்டு மட்டும் 40% வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஃப்ரஷர்கள்

ஃப்ரஷர்கள்

குறிப்பாக ஃப்ரஷர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக நிறுவனங்கள் ஃப்ரஷர்களை வேலைக்கு எடுத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வேலை கொடுக்க விரும்புகிறது என்றும் அனுபவம் உள்ளவர்களை வேலைக்கு எடுத்தால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால் இந்த முறையை பல நிறுவனங்கள் பின்பற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

நவுக்ரி
 

நவுக்ரி

அந்த வகையில் நடப்பாண்டில் ஃப்ரஷர்களுக்கு மட்டும் 61 சதவீத வேலை வாய்ப்பு இருப்பதாக நவுக்ரி அறிக்கை கூறியுள்ளது. அதேபோல் 4 முதல் 7 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கொண்டவர்களுக்கு 35 சதவீத வேலைவாய்ப்பும், 8 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு 22 சதவிகித வேலைவாய்ப்பும், 13 முதல் 16 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு 26 சதவிகித வேலைவாய்ப்பும், 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களுக்கு 27 சதவீத வேலை வாய்ப்புகளும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மருத்துவத்துறை

மருத்துவத்துறை

மருத்துவத் துறை மற்றும் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும் இந்த இரண்டு துறைகளில் மட்டும் 357% வேலைவாய்ப்புகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவத் துறையில் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரீடெய்ல் துறை

ரீடெய்ல் துறை

அதேபோல் ரீடெய்ல் துறையில் 175 சதவீத வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், ரியல் எஸ்டேட் துறையில் 141 சதவீதம், இன்சூரன்ஸ் துறையில் 100% வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி - சென்னை

டெல்லி – சென்னை

இந்தியாவைப் பொருத்தவரை டெல்லியில் தான் அதிக வேலை வாய்ப்பு உள்ளதாகவும் அதனை அடுத்து கொல்கத்தா மற்றும் சென்னையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படித்தவுடன் வேலை

படித்தவுடன் வேலை

மொத்தத்தில் படித்து முடித்தால் வேலை கிடைக்குமா? என்ற சந்தேகம் இளைஞர்களுக்கு தற்போது இல்லை என்றும் படித்துக்கொண்டிருக்கும் போதே வேலை கிடைக்கும் வாய்ப்பு தான் அதிகம் இருப்பதாகவும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கூறிவருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India witness 40% growth in hiring, demand for freshers at highest ever

India witness 40% growth in hiring, demand for freshers at highest ever |

Story first published: Friday, June 3, 2022, 18:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.