கொழும்பு: இலங்கையின் வேளாண் பாதிப்பை தடுக்க, பிரதமர் மோடி உரம் சப்ளை செய்ய உறுதி அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கை, உர இறக்குமதிக்கு தடை விதித்ததால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதன் காரணமாக நெல் சாகுபடி குறைந்து உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, இலங்கை அரசு இந்தியாவிடம் உரம் வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தது.
இதை ஏற்று பிரதமர் மோடி, இலங்கைக்கு உரம் வழங்க உறுதி அளித்துள்ளதாக கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கைக்கு, 65 கோடி கிலோ உரம் வழங்க கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி விரைவில் இலங்கைக்கு உரம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு: இலங்கையின் வேளாண் பாதிப்பை தடுக்க, பிரதமர் மோடி உரம் சப்ளை செய்ய உறுதி அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.நம் அண்டை நாடான இலங்கை, உர
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.