கொழும்பு:இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம் தொடர்பாக நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில், முக்கிய தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப் பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால், பார்லிமென்டுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவால் கொண்டு வரப்பட்டது.
அரசியலமைப்பின் 19வது சட்டத் திருத்தத்தை மீண்டும் அமல்படுத்தும் வகையில், தற்போது அதிபருக்கே அனைத்து அதிகாரங்கள் உள்ள 20ஏ சட்டத் திருத்தத்தை நீக்கிவிட்டு, 21வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.இது தொடர்பாக முக்கிய கட்சித் தலைவர்களை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே சமீபத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது சில சட்ட விதிகளில் கட்சி தலைவர்கள் இடையே மாற்று கருத்துகள் இருந்தன. இந்நிலையில் இரண்டாம் கட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில் தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement