உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 100 நாட்களை அடைந்துள்ள நிலையில் நாட்டின் 20 சதவீத நிலம் ரஷ்யா வசம் சென்றுவிட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யப் படைகள் உக்ரேனிய நிலப்பரப்பில் சுமார் 48,000 சதுர மைல்களை ஆக்கிரமித்துள்ளன – இது நியூயார்க் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பை விட பெரியது என அவர் கூறியுள்ளார்.
ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசுகையில், ரஷ்ய இராணுவம் ஏற்கனவே கிட்டத்தட்ட முழு டான்பாஸையும் அழித்துவிட்டது என கூறியுள்ளார்.
ரஷ்ய ராணுவத்தின் மீது எதிர்த்தாக்குதல் நடத்த சிறை கைதிகளையும் உக்ரைன் களம் இறங்கியுள்ளது. உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை ரஷ்ய கபளீகரம் செய்துவிட்டதாக இங்கிலாந்து ராணுவம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.