உக்ரைன் படையெடுப்பின் மூலம் ரஷ்ய ஜனாதிபதி புடின் மிகப்பெரிய வரலாற்று மற்றும் அடிப்படை பிழையை செய்துவிட்டார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்ய போரானது கிட்டத்தட்ட 100 நாள்களை கடந்து இருக்கும் நிலையில், இந்த போரின் தாக்கமானது பல்வேறு உலக நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது.
இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நடவடிக்கைகள் மூலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடின் மிகப்பெரிய வரலாற்று மற்றும் அடிப்படை பிழையை செய்து விட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக பிரான்ஸ் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நான் நினைக்கிறேன், நான் அவரிடன் எடுத்துரைக்கவும் செய்தேன், ஆனால் அவர் தனது மக்களுக்காகவும், வரலாற்றிற்காகவும், மற்றும் தனக்காகவும் விலைமதிக்க முடியாத மிகப்பெரிய வரலாற்று மற்றும் அடிப்படை பிழையை செய்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன், தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொள்ளுதல் விஷயமல்ல, ஆனால் அதிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமான பாதை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவை அவமானப்படுத்தக்கூடாது என்ற தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி, சண்டை நிறுத்தப்படும் நாளில் தூதரக வழிகளில் வழியை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: உணவு தானிய ஏற்றுமதி எளிதாக்கப்படும்…புடின் அளித்த வாக்குறுதி!
அதே நேரம் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு பயணம் செய்யும் திட்டதையும் நிராகரிக்கவில்லை எனத் தெரிவித்தார்.