நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடித்துள்ள ‘காடுவெட்டி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கே சுரேஷ் நடித்து வரும் திரைப்படம் காடுவெட்டி.
இந்தத் திரைப்படம் உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தில் பிறந்து, பின் மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.குருநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜெ.குரு அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை திறக்க காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறையை ஒழித்துள்ளார். இவருக்கு மாவீரன் என்ற சிறப்புப்பெயரும் உண்டு.
ஏற்கனவே காடுவெட்டி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது, சற்றுமுன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.