உலக சுற்றுச்சூழல் தினம்- மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

மண் வளப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் மயிலாப்பூர் முதல் செங்கப்பட்டு வரை 55 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது.
கோவை மற்றும் சேலத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமும், மதுரை, நாகர்கோவில், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு வாக்கத்தான் (தொடர்நடை பயணம்) நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

மேலும், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஸ்டாண்டத்தான் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இதுதவிர, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்ய உள்ளனர்.

மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 74 நாடுகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

இதையும் படியுங்கள்..
ரெய்டு பயத்தால் வாய் திறப்பதில்லை அதிமுக- பாரதிய ஜனதா மீண்டும் தாக்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.