உலக மிதிவண்டி நாளையொட்டிப் பிரதமர் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், மகாத்மா காந்தி மிதிவண்டி ஓட்டிச் செல்லும் படத்தை வெளியிட்டுள்ளார்.
சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை எனத் தலைப்பிட்டு மகாத்மா காந்தியின் படத்தைப் பதிவிட்டுள்ளார்.
நீடித்த, நலமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற ஊக்கமளிப்பதில் மகாத்மா காந்தியைவிடச் சிறந்தவர் உண்டோ என்றும் குறிப்பிட்டுள்ளார்.