குடும்பத்துடன் நகைமதிப்பீட்டாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் .இவருக்கு திருமணமாகி ரோகிணி என்ற மனைவியும் அர்ச்சனாஎன்ற மகளும் உள்ளனார். ரமேஷ் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அக்கா மேகலா தங்கை ரோகிணியை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் அழைப்பை ஏற்காததால் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு பூட்டியிருந்ததால் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரமேஷ் கடிதம் ஒன்றை எழுதி அதன் மேல் பணம் மற்றும் பைக் சாவியை வைத்து விட்டு மனைவியுடன் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். அவரது மகள் அறையில் விஷமருந்தி சடலமாக கிடந்தார்.
அவர்களின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதபரிசோதனைகககானுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர்.அதில், வேலைக்கு செல்வதால் அவரால் குடும்பத்தினரை கவனிக்க முடிய வில்லை என தெரிவித்திருந்தார்.
அருகில் உறவினர்கள் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எங்கள் சாவிற்கு யாரும் காரணம் இல்லை அண்ணன் மகாத்மா என்ற காந்திக்கும் அக்கா கணவர் ஸ்ரீகுமாருக்கும் 8-அடி பாதையை ரெஜிஸ்டர் பண்ணி கொடுக்கவும் என்றும் இறுதி செலவுக்கு 64-ஆயிரம் ரூபாய் வைத்துள்ளதாகவும் எங்கள் மரணத்திற்கு பின் இந்த வீடும், இடமும் பைக்கும் மேகலா முருகனுக்கு உரிமையாக்குகிறேன் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.