கடந்த மே மாதம் 05ம் திகதி இடம்பெற்ற 38வது படைப்பிரிவின் தெரிவு முகாமில், ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட காவத்தமுனை அல்-அமீன் மகா வித்தியாலய பாதுகாப்பு கடெட் அணியினர் இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளனர்.
அனைத்துப் போட்டிகளிலும் பங்குபற்றி படைப்பிரிவின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 05 பாடசாலை அணிகளுள் அல்-அமீன் மகா வித்தியாலய பாதுகாப்பு கடெட் அணியினர் இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.
அதன் பின்னர் 2022.05.20 முதல் 2022.05.26 வரை ரன்தம்பே பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கிடையிலான கணிப்பீட்டு முகாமிலும் கலந்துகொண்டனர்.
தொடங்கிய 06 மாதங்களுக்குள் பல முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு மாகாண மட்டத்திற்கு இவ்வணி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வியமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 06 நாட்கள் பரீட்சைகளை கொண்ட மாகாண கணிப்பீட்டு முகாமில்
2nd Lt. A.R.M.நியாஸ் (Platoon Commander) தலைமையில் பாடசாலை சார்பாக 25 மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.