கள்ளகாதலுக்கும் இடைஞ்சலாக இருந்த சகோதரனை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுகல் மாவட்டம், குடைபாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவர் கடந்த 25 ம் தேதி மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிள்ளனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆஅய்வு செய்த போது சர்தார் என்பவர் சூர்யாவை தாக்கியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சூர்யாவின் அக்கா மணிஷாவுடன் திருமணமணத்தை தாண்டிய உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த சூர்யா மணிஷாவை கண்டித்துள்ளார்.
இதனை அறிந்த சர்தார்த் சூர்யாவை கொலை செய்ய முயன்றுள்ளார். சர்தாரின் திட்டத்திற்கு உதவிய மனிஷா மற்றும் அவரது சகோதரி சீமா தேவியை பிடிக்க காவல்துறையினர் சென்ற போது விஷம் குடித்து விட்டதாகவும் தன்னை பாஜக பிரமுகர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக அழுது புலம்பியுள்ளார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் விஷமருந்தாமல் நாடகமாடியது தெரியவந்தது. இதன்னை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.