சிவகங்கை அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த கும்பலை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காரைக்குடி அருகே சுப்பிரமணியபுரத்தில் வசித்துவரும் ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்து இறுதினங்களுக்குமுன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளனர்.
நேற்று இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகை, ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து காவல் நிலையத்தில் ஐயப்பன் புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன், சிசிடிவி கேமரா காட்சிகளின் பதிவுகளின் அடிப்படையில் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.